
இளங்கலை பட்டப் படிப்பில் முதல் நிலையில் தேர்ச்சி பெற்ற மாணவர்களின் உயர்கல்வி கடனுதவியிலிருந்து விலக்களிக்கப் படுவதாகப் பிரதமர் Ismail Sabri Yacob (இஸ்மாயில் சப்ரி யாக்கோப்) தெரிவித்தார். இந்தச் சலுகையானது 2019ஆம் ஆண்டிலிருந்து தொடங்கும் என்று அவர் தெரிவித்தார். கல்வியில் சிறந்து விளங்கும் மாணவர்களுக்கு ஊக்கம் அளிக்கவே இந்த அனுகூலம் வழங்கப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.
