27.5 C
Kuala Lumpur
Monday, April 27, 2026

Vetri

மெட்ரிகுலோஷன் இட ஒதுக்கீடு பற்றிய புள்ளி விவரம் வேண்டும்

இவ்வாண்டு மெட்ரிகுலோஷன் வகுப்புகளில் இடம் கிடைத்த மாணவர்களின் இன வாரியான இட ஒதுக்கீட்டை கல்வி அமைச்சர் அறிவிக்க வேண்டுமென கிள்ளான் எம்பி சார்ல்ஸ் சந்தியாகோ வலியுறுத்தியுள்ளார். பக்காத்தான் காலத்தில் மெட் ரிக்லோஷன் வகுப்புகளுக்கு 40,000 இடங்கள் ஒதுக்கப்பட்டு அதில் 10 விழுக்காடு மலாய்க்காரர் அல்லாதோருக்கு வழங்கப்பட்டது. இந்நிலையில் சிறந்த மதிப்பெண்கள் பெற்ற 200க்கும் அதிகமான இந்திய மாணவர்களுக்கு இவ்வாண்டு இடம் வழங்கப்படவில்லை. இது மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியள்ளதாக சந்தியாகோ தெரிவித்தார். எனவே, கல்வியமைச்சர் ராட்ஸி ஜிடின் இதில் தலையிட்டு இனவாரியாக இடம் வழங்கப்பட்ட புள்ளி விவரத்தை அறிவிக்க வேண்டுமென சந்தியாகோ கேட்டுக் கொண்டார்

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles