
நாட்டில் வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்து குறிப்பிட்ட நேரத்தில் ஓரிடத்திற்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் மோட்டார் சைக்கிளை வாடகைக்கார் போல பயன்படுத்தும் சேவையை முக்கிய நகர்களில் அனுமதித்தால் அது பொதுமக்களுக்குப் பேருதவியாக இருக்கும் என்று Dego Ride (டெகோ ரைட்) எனும் மோட்டார் சைக்கிள் சேவையை வழங்கும் நிறுவனத்தின் தோற்றுநர் Nabil Faizal Pamataj (நாபில் ஃபைசால் பாமதாஜ்) குறிப்பிட்டார். இச்சேவைக்கான சட்டத்தை இயற்றினால் அதன் மூலம் இச்சேவையை வழங்குவோரும பயணிகளும் பலனடைவர் என்றும் அவர் தெரிவித்தார்.
