
வரும் பொதுத்தேர்தலுக்குப் பின்னர் தேசிய முன்னணி ஆட்சி அமைக்க பெரிக்காத்தான் நேஷனலின் ஆதரவு முக்கியமாகத் தேவைப்படும். பெரிக்காத்தானை ஒதுக்கித் தள்ளி அம்னோ ஆட்சியை அமைக்க முடியாது என்று பெர்சத்துவின் தலைமைச் செயலாளர் ஹம்ஸா ஸைனுடின் எச்சரிக்கை விடுத்துள்ளார். கடந்த பொதுத்தேர்தலுக்கு பின்னர் கொல்லைப்புற வழியாக ஆட்சியை அமைத்த அம்னோவுக்கு, பெர்சத்து உதவிக்கரம் நீட்டாதிருந்தால் அது ஆட்சியை அமைத்து இருக்க முடியாது என்றும் அவர் தெரிவித்தார்.
