24.7 C
Kuala Lumpur
Saturday, April 25, 2026

Vetri

மலேசிய தாய்மாருக்கு வெளிநாட்டில் பிறக்கும் குழந்தைக்கான குடியுரிமை: அரசமைப்புச் சட்டத்தைத் திருத்துக

மலேசிய தந்தையர்களைப் போலவே மலேசிய தாய்மார்களுக்கும் வெளிநாட்டில் பிறக்கும் குழந்தைக்கு இயல்பான முறையில் குடியுரிமை வழங்க வேண்டுமென தேசிய முன்னணி மகளிர் அணியினர் கோரியுள்ளனர். நேற்று நடந்த தேசிய முன்னணி மகளிர் மாநாட்டில் இந்தப் பரிந்துரையை மகளிர் தலைவி Noraini Ahmad (நொராய்னி அமாட்) கோரிக்கை விடுத்தார். அதனையடுத்து, இரண்டு வயதுக்கும் குறைவான குழந்தையைக் கொண்டிருக்கும் மகளிர் விட்டிலிருந்தே வேலை செய்ய அனுமதிக்க வேண்டுமென்றும் கேட்டுக் கொண்டார். பள்ளிகளில் இருந்து விலகிய மாணவர்கள் மீண்டும் கல்வியைத் தொடரவும், கல்வி பயிலும் மாணவர்களுக்குத் தேவைப்படும் இலவச உணவு, தேர்தலில் மகளிருக்கு 30 விழுக்காடு இட ஒதுக்கீடு வாய்ப்பு போன்ற பரிந்துரையையும் அவர் முன்வைத்தார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles