
பொதுத்துறை நிறுவனங்களில் (ஜெஎல்சி) ஓய்வு பெற்ற பணியாளர்களுக்கு வழங்கப்படும் குறைவான ஓய்வூதியத்தை எதிர்த்து ஆகஸ்டு 18ஆம் தேதி கவனயீர்ப்பு அமைதிப் பேரணி நடத்தப்படும் என்ற அந்த அமைப்பின் தலைவர் Mohd Shafie PP Mammal (முகமட் ஷாபி பிபி மம்மால்) குறிப்பிட்டார். இது சம்பந்தமாக கடந்த 20 ஆண்டுகளாக 10க்கும் அதிகமான பல நினைவுக் கடிதங்களை அரசுக்கு அனுப்பி இருந்தும், அரசு எந்தவொரு முடிவையும் எடுக்கவில்லை என்று அவர் தெரிவித்தார். ஓய்வு பெற்றவர்களுக்கு ஆண்டுக்கு 2.0 விழுக்காடு ஓய்வூதிய அதிகரிப்பு வழங்கப்படுவதாகவும் அது வாழ்க்கைச் செலவினத்தை எதிர்கொள்ளப் போதாது என்று அவர் தெரிவித்தார். ஜிஎல்சி அமைப்புகளில் பணியாற்றியோருக்கு 25 ஆண்டு காலம் பூர்த்தியாகவில்லை என்பதால், பெரும்பாலோருக்கு 180 ரிங்கிட்டுக்கும் குறைவான ஓய்வூதியமே கிடைப்பதாக அவர் தெரிவித்தார்.
