28.5 C
Kuala Lumpur
Saturday, April 25, 2026

Vetri

சீனர்களால் இந்தியர்களுக்கான மெட்ரிகுலேஷன் வாய்ப்பு பறிபோனதா ? ராமசாமி கேள்வி

GEORGETOWN 21 JUN 2018. Timbalan Menteri Pulau Pinang II, Prof Dr. P. Ramasamy semasa sidang media mengenai isu Akta Kesalahan Keselamatan (Langkah-Langkah Khas) 2012 (SOSMA) di pejabatnya Tingkat 52, Komtar, Pulau Pinang. NSTP/MIKAIL ONG

சீனர்களால் இந்தியர்களுக்கான மெட்ரிகுலேஷன் வாய்ப்பு பறிபோனதா ? என கேள்வி எழுப்பியிருக்கின்றார் பினாங்கு துணை முதலைமைச்சர் டாக்டர் பி. ராமசாமி. மெட்குலேஷன் நுழைவுக்கு , மலாய்க்காரர் அல்லாதவர்களுக்கு 10 விழுக்காடு இடம் ஒதுக்கப்பட்டிருக்கின்றது; இந்நிலையில், பக்காத்தான் ஹரப்பான் கால கட்டத்தில் இந்தியர்களைக் காட்டிலும் சீனர்களுக்கு அந்த இட ஒதுக்கீட்டின் கீழ் அதிகம் வாய்ப்பு தரப்பட்டதாக டான் ஶ்ரீ எஸ். ஏ. விக்னேஸ்வரன் கூறியிருந்தார். அதையடுத்து, ஏற்கனவே இன சர்ச்சையான மெட்ரிகுலேஷன் விவகாரத்தை, மேலும் இனவாதமாக்க முயற்சிக்க வேண்டாமென , பி. ராமசாமி கேட்டுக் கொண்டார். அதோடு, 10 விழுக்காட்டுக்கான ஒதுக்கீட்டில் , சீனர்களுக்கு அதிக இடம் வழங்கப்பட்டதால், இந்தியர்களுக்கு குறைவான இடம் கிடைத்தது எனும் கூற்றினையும் தம்மால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை என அவர் குறிப்பிட்டார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles