
பேரா மாநில இந்தியர் கல்வி மேம்பாட்டு அறவாரியத்திற்கு மாநில அரசு வழங்கிய 2,000 ஏக்கர் நிலத்தில் பயிரிடப்பட்ட செம்பனையின் அறுவடையின் மூலம் கிடைத்த நிதியின் ஒரு பகுதியான 2 லட்சிம் ரிங்கிட் தமிழ்ப் பள்ளியில் பயிலும் வசதிக் குறைந்த மாணவர்களுக்கு உதவி நிதியாக வழங்கப்படும். 133 தமிழ்ப்பள்ளிகளில் பயிலும் 750 வசதி குறைந்த மாணவர்கள் முதல் கட்டமாக இந்த நிதியுதவியை பெறுவார்கள் என அந்த அறவாரியத்தின் தலைவர் எஸ். முனியாண்டி தெரிவித்தார். அந்த நிதி வழங்கும் ஏற்பாடு விரைவில் நடைபெறும் என்பதோடு எதிர்வரும் காலங்களில் இடைநிலைப் பள்ளியில் பயின்றுவரும் ஏழை இந்திய மாணவர்களும் இந்த நிதியுதவியை பெறுவார்கள் என முனியாண்டி கூறினார். வாரியத்தின் அலுவலகத்தில் அதன் வாரிய உறுப்பினர்களுடன் நடத்தப்பட்ட சந்திப்பிற்குப் பின்னர் அவர் இதனை தெரிவித்தார்.
