
செப்டம்பர் 1ஆம் தேதியிலிருந்து வார வேலை நேரத்தை 48லிருந்து 45 மணியாகக் குறைத்தது தொழில் துறைக்குப் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது. நாடு இப்போதுதான் சரிவிலிருந்து மீண்டு வரும்போது இம்மாதிரியான சட்டத்தை அமல்படுத்தினால், பொருள்களின் உற்பத்தி குறைந்து, விலையேற்றம் அதிகரித்து, வாழ்கைகைச் செலவினம் அதிகரிக்கும் என்று மலேசிய தொழில்துறைக் கழகக் கூட்டமைப்பு எச்சரித்துள்ளது. எனவே, இந்தப் புதிய விதிமுறையை இன்னும் ஈராண்டுக்கு ஒத்திவைத்து 3,000 ரிங்கிட்டுக்கும் அதிகமான சம்பளம் பெறுவோருக்கு இதிலிருந்து விலக்களிக்கப்பட வேண்டுமென அக்கழகம் கேட்டுக் கொண்டுள்ளது.
