34 C
Kuala Lumpur
Saturday, April 25, 2026

Vetri

5 போர்க் கப்பல்கள் 22-60 விழுக்காடு மட்டுமே நிர்மாணிக்கப்பட்டுள்ளன

மலேசிய கடற்படைக்கு அழைப்பாணை கொடுக்கப்பட்ட 6 போர்க் கப்பல்களில் 5 கப்பல்கள் 22லிருந்து 60 விழுக்காடு மட்டுமே நிர்மாணிக்கப் பட்டுள்ளன. முதல் கப்பல் 60 விழுக்காடும், இரண்டாவது கப்பல் 48ம், மூன்றாவது கப்பல் 43ம், நான்காவது கப்பல் 36 விழுக்காடும் ஐந்தாவது கப்பல் 22 விழுக்காடும் நிர்மாணிக்கப் பட்டிருப்பதாகவும் 6ஆவது கப்பல் வேலைகள் இன்னும் தொடங்கப் படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த 6 கப்பல்களுக்கான ஒப்பந்தம் 2013ஆண்டு கையுழுத்திடப்பட்டு 2023ஆம் ஆண்டு அவை கடற்படையிடம் ஒப்படைக்கப்பட வேண்டும். ஆனால், இது வரை ஒரு கப்பல் கூட ஒப்படைக்கப் படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles