24.7 C
Kuala Lumpur
Wednesday, June 17, 2026

Vetri

வேலை வாங்கித் தருவதாக மோசடி செய்த நால்வர் கெந்திங்கில் கைது

🔥 Views : 6
👁 Reading Now : 32

வேலை வாங்கித் தருவதாகவும் வங்கி டிராப்ட் மோசடியில் ஈடுபட்டிருந்ததாக நம்பப்படும் நால்வர் நேற்று கெந்திங்கில் கைது செய்யப் பட்டனர். அவர்கள் அனைவரும் வேலை வாங்கித் தருவதிலும் வங்கி டிராப்ட் மோசடியிலும் ஈடுபட்டதாகவும் நம்பப்படுகிறது. கைது செய்யப்பட்டவர்களில் சீன பிரஜை ஒருவரும் அடங்குவார். அவர்கள் அனைவரும் 21லிருந்து 32 வயதுடையவர்கள் என்றும் ஒருங்கிணைக்கப்பட்ட தேடுதல் நடவடிக்கையில் அவர்கள் கைது செய்யப்பட்டதாக பஹாங் போலீஸ் தலைவர் Ramli Mohd Yusof தெரிவித்தார். இவர்கள் மேற்கண்ட குற்றச் செயல்களில் கடந்த 6 மாதங்களாக ஈடுபட்டது கண்டு பிடிக்கப்பட்டது. கைது நடவடிக்கையின்போது ஒரு கைப்பேசியும் 6 மடிக் கணினிகளும் கைப்பற்றப்பட்டன.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles