
போர்க் கப்பல் குத்தகையில் துணைக் குத்தகை பெற்ற Zainab (ஸைனாப்) என்பவர் பிரதமர்துறை அமைச்சர் Abdul Latiff (அப்துல் லத்திப்பின்) இரண்டாவது மனைவி என்று தாம் கூறியது சம்பந்தமாகத் தம்மை போலீசார் விசாரித்துள்ளதாக Rafizi Ramli (ரபிஸி ரம்லி) குறிப்பிட்டார்.
இந்தக் குற்றச்சாட்டு சம்பந்தமாக மின்னல் வேகத்தில் போலீசார் செயல்பட்டது போல, மில்லியன் ரிங்கிட் கணக்கான துணைக் குத்தகயை ஸைனாப்பிற்கு பெற்றுத் தந்ததே அப்துல் லத்திப்தான் என்றும் ஸைனாப்பின் இரு நிறுவனங்களில் அவருக்குப் பங்கு இருப்பதால் இந்த விவகாரத்தைப் போலீசார் விசாரித்து உண்மையைச் சொல்ல வேண்டுமென ரபிஸி கேட்டுக் கொண்டார்.
