25.5 C
Kuala Lumpur
Friday, September 25, 2026

Vetri

மலேசிய கடப்பிதழை சட்டவிரோதமாக வைத்திருந்த வெளிநாட்டுத் தம்பதியர் கைது

🔥 Views : 23
👁 Reading Now : 56

மலேசியக் கடப்பிதழை வைத்திருந்த வெளிநாட்டுத் தம்பதியர் தாய்லாந்திலிருந்து கோலாலம்பூருக்கு வந்து தங்களது பெயர்களை மாற்றிக் கொண்டுள்ளனர்.
மியன்மார் ஆடவரும் அவரது தாய்லாந்து மனைவியுடன் சேர்ந்து அவர்கள் மியன்மாரிலிருந்து ஆட்களை மலேசியாவுக்கு வேலைக்காக அழைத்து வந்து, தாய்லாந்து எல்லையில் பணத்தைப் பிடுங்கிக் கொண்டு, அவர்களைக் கொன்று புதைத்துள்ள சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பெயர்களை மாற்றிக் கொண்டது உண்மைதான் என்றும் ஆனால், ஆள் கடத்தல் நடவடிக்கையில் ஈடுபட்டது இல்லையென்றும் அவர்கள் சாதித்து வருகின்றனர்.
இந்நிலையில் பெர்லிஸ், வாங் கிளியானில் காணப்பட்டது போல தாய்லாந்திலும் காணப்பட்டுள்ளன.
மியன்மார் அகதிகளைக் கொன்று புதைத்த சம்பவத்தை ஆராய அரச விசாரணை ஆணையம் ஒன்று 2019இல் அமைக்கப்பட்டு அதன் விசாரணையும் நடத்தப்பட்டது. ஆனால், அதன் அறிக்கை என்னவானது என்பது இன்னமும் மர்மமாகவே உள்ளது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles