24.7 C
Kuala Lumpur
Thursday, September 24, 2026

Vetri

தடுத்து வைக்கப்பட்டிருக்கும் 135 மியன்மார் பிரஜைகளை நாடு கடத்தக் கூடாது

🔥 Views : 19
👁 Reading Now : 24

அடைக்கலம் நாடி வந்திருக்கும் 135 மியன்மார் நாட்டவர்களைச் சொந்த நாடுக்கு நாடு கடத்தக் கூடாதென சின் கூட்டமைப்பும் Beyond Borders (பியோன் போர்டரஸ்) அரசு சாரா இயக்கமும் வலியிறுத்தியுள்ளன.
அண்மையில் மியன்மார் ராணுவ அதிகாரிகள் குடிநுழைவு அதிகாரிகளிடம் அகதிகள் பற்றி பேச்சு வார்த்தை நடத்தியது பெருத்த சந்தேகத்தை ஏற்படுத்தியிருப்பதாக அவை தெரிவித்தன.
அகதிகளைச் சொந்த நாட்டுக்கு அனுப்பினால், ராணுவத்தினரால் சித்திரவதை செய்யப்பட்டு கொல்லப்படும் அபாயம் இருப்பதாக அவை தெரிவித்துள்ளளன.
ஆயிரக் கணக்கான எதிர்ப்பாளர்கள் கைது செய்யப்பட்டு, மோசமாக நடத்தப்பட்டு, பெண்கள் கற்பழிக்கப்பட்டு, கொல்லப்பட்டும் வருகின்றனர்.
எனவே, அவர்களைச் சொந்த நாட்டுக்கு அனுப்பாமல் இங்கேயே பாதுகாக்க வேண்டுமென அவ்வியக்கங்கள் கேட்டுக் கொண்டுள்ளன.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles