31.6 C
Kuala Lumpur
Saturday, September 26, 2026

Vetri

நஜிப்பை சிறையில் அடைத்ததற்கு இஸ்மாயில் மீது கோபம் எதற்கு?

🔥 Views : 20
👁 Reading Now : 31

எஸ்ஆர்சி வழக்கில் நஜிப் ரசாக்கிற்கு தண்டனையை கூட்டரசு நீதிமன்றம் உறுதி செய்து, அவரை காஜாங் சிறைக்கு அனுப்பியது அம்னோவினரிடையே சினத்தை ஏற்படுத்தி இருப்பதாக அம்னோ செயலாளர் Ahmad Mazlan (அமாட் மஸ்லான்) குறிப்பிட்டுள்ளார்.
அந்த வழக்கில், சட்டம் தனது கடமையைச் செய்ய வேண்டுமென்ற எண்ணத்தில், பிரதமர் இஸ்மாயில் சப்ரி யாக்கோப், கடுமையான நெருக்குதல் கொடுக்கப்பட்ட பின்னரும், அந்த வழக்கிலும், தீர்ப்பிலும் தலையிடவில்லை என்பது சரியான முடிவாகும்.
இந்நிலையில், அவர் வழக்கில் தலையிட்டு நஜிப்பைக் காப்பாற்றவில்லை என்று அம்னோவினர் அவர் மீது, கடும் வெறுப்பில் இருப்பது பட்டவர்த்தனமாக வெளிப்பட்டாலும், அதில் இஸ்மாயிலை வெறுக்கக் காரணமில்லை என்று அவர் தெரிவித்தார்.
நஜிப் சிறைக்குச் சென்றதைப் பயன்படுத்தி, அதன் அநுதாபத்தைக் கருவியாகக் கொண்டு, பொதுத்தேர்தலில் தேசிய முன்னணியின் வெற்றியை உறுதி செய்ய கட்சி முனைந்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles