
மதுபான விற்பனைக்கு அனுமதியளித்து, 4டி டிக்கெட்டுக்கான தடையை விதியுங்கள் என்று முஸ்லிம் அல்லாத பாஸ் கட்சி ஆதரவாளர்கள் அதன் பேராளர் கூட்டத்தில் வலியுறுத்தியுள்ளனர்.
பாஸ் கட்சியின் Muktamar (முக்தாமாரில்- பொதுச் சபை) உரையாற்றும்போது பாஸ் ஆதரவாளர் பிரிவின் உதவிச் செயலாளர் ஸ்ரீதரன், கிளந்தானில் அமல்படுத்தப்படும் நடவடிக்கையை பாஸ் கட்சி பின்பற்ற வேண்டுமென கேட்டுக் கொண்டார்.
மதுபான விற்பனையை முற்றிலும் தடை செய்தால், அது முஸ்லிம் அல்லாதோரின் சினத்தை உருவாக்கி பாஸ் கட்சியின் மீது வெறுப்பை அதிகரித்து பொதுத்தேர்தலில் வாக்குச் சரிவை ஏற்படுத்தும் என்று அவர் எச்சரித்தார்.
நவம்பர் மாதம் முதல் கெடாவில் முஸ்லிம்கள் வாழும் பகுதிகளில் மது விற்பனைக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
