
முஸ்லீம்களுக்கே முக்கியத்துவம் செலுத்தும் பாஸ் கட்சியில், முஸ்லிம் அல்லாதோர் உறுப்பினராக இருப்பதாலும், முஸ்லீம் அல்லாதோருக்கான பிரிவு இருப்பதாலும் என்ன பயன் என வினவியிருக்கின்றார், பினாங்கு துணை முதலமைச்சர் டாக்டர் பி. ராமசாமி. ஒரு முழு உறுப்பினராக இல்லாமல் , வாக்களிக்கும் உரிமை அல்லது முடிவெடுக்கும் எந்த உரிமையும் இல்லாத ஓர் இணை உறுப்பினராகவே அந்த கட்சியில், தன்மானம் இழந்த முஸ்லீம் அல்லாத ஒருவரே இணைய முடியும். அவ்வாறு இணைந்த சிலர் , கட்சியின் இனவாத போக்குடைய கொள்கைகளுக்கு கண்மூடித்தனமாக ஆதரவளிப்பவர்களாக உள்ளனர் அதற்காக , அவர்களுக்கு அவ்வப்போது வெகுமதி கிடைக்கலாம். அதனால் தான், அண்மையில் அக்கட்சியின் தலைவர் அப்துல் ஹடி அவாங் , நாட்டில் ஊழலுக்கு ஆணிவேர் முஸ்லீம் அல்லாதவர்கள் என கூறியிருந்தபோது , அந்த இணை உறுப்பினர்கள் அவரை தற்காத்து பேசியிருந்ததாக ராமசாமி குறிப்பிட்டார். ஹடி சொல்ல வந்த கருத்தை தவறுதலாக புரிந்து கொள்ளப்பட்டதாக, அவருக்கு ஆதரவாக முதுகெலும்பில்லாத இந்த இணை உறுப்ப்பினர்கள் பேசியிருப்பதாக அவர் கூறினார்.
