27.7 C
Kuala Lumpur
Tuesday, September 29, 2026

Vetri

ஐநா அகதிக்களுக்கான ஆணையத்தை மூட வேண்டுமா?

🔥 Views : 27
👁 Reading Now : 34

கோலாலம்பூரில் உள்ள அகதிகளுக்கான ஆணையத்தை மூடினால் இங்கிருக்கும் அகதிகளின் விவகாரங்களை முறையாக நிர்வகிக்க முடியும் என்று தேசிய பாதுகாப்பு கவின்சிலின் தலைமை இயக்குநர் ரோட்ஸி மாட் சாட் கூறியிருப்பது பெரும் கண்டனத்துக்கு உள்ளானது.
புக்கிட் பெண்டேரா எம்பி வோங் ஹோன் வாய் அது பற்றிக் கூறும்போது, இது உலகளவில் நாட்டுக்கு கெட்ட பெயரை ஏற்படுத்தும் என்றும் கலந்தாலோசிக்காமல் ஆணையத்தை மூட முடியாது. அந்த அலுவலகத்தின் மூலமே மற்ற நாடுகளுக்கு வேண்டிய உதவிகளைச் செய்ய முடியும் என்றும் குறிப்பிட்டார்.
அது பற்றி பினாங்கு துணை முதல்வர் டாக்டர் ராமசாமி கூறும்போது, ரோட்ஸியின் கூற்றின்படி, மலேசியா ஐநாவின் உத்தரவுக்குக் கட்டுப்படக் கூடாதென்று கூறுகிறாரா என்றும் அவரின் கூற்று அவர் வகிக்கும் பதவிக்குப் பொருத்தமாக இல்லையென்பதால், அவர் பதவி விலக வேண்டுமென வலியுறுத்தினார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles