
அம்னோவின் கொள்கைகள் மாறி அதில் ஊழல்வாதிகள் அதிகமாக உருவாகி இருப்பதாகவும் அதன் மேல்மட்டத் தலைவர்களும் ள் கீழ்மட்டத் தலைவர்களும் ஊழலில் திளைத்து நாட்டையே கெடுத்துக் குட்டிச் சுவராக்கி உள்ளனர்.
கோடி கோடியாகக் கொள்ளையடித்த நஜிப் இப்போது சிறையில் இருக்கிறார். இன்னும் சில கூடிய விரைவில் சிறை செல்லவிருகின்றனர்.
கூட்டரசு நீதிமன்றத்தில் தண்டனை விதிக்கப்பட்டாலும் அதனை ஏற்றுக் கொள்ளாமல் நஜிபை தற்காக்க ஒரு கும்பலே முயன்று வருகிறது.
அம்னோவில் இருந்து ஊழலை பிரிக்க முடியாது. அது தொடர்ந்து ஆட்சியில் நீடித்தால், நாட்டை காணாமல் ஆக்கிவிடும் என்று குறிப்பிட்ட மகாதீர் அதனைத் தடுக்க அம்னோவை குழி தோண்டிப் புதைக்க வேண்டுமென்று குறிப்பிட்டார்.
