26.6 C
Kuala Lumpur
Sunday, September 27, 2026

Vetri

மேல் முறையீட்டு நீதி மன்றத்தில் ஸுரைடா தோல்வி: ரிம. 1 கோடியை பிகேஆருக்கு செலுத்த வேண்டும்

🔥 Views : 23
👁 Reading Now : 59

பிகேஆர் கட்சியின் விதிமுறையை மீறி கட்சி தாவிய Zuraidah Kamarudin (ஸூரைடா காமாருடின்) அக்கட்சிக்கு ஒரு கோடி ரிங்கிட்டை செலுத்த வேண்டுமென்ற உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பினை மேல் முறையீட்டு நீதிமன்றம் உறுதிப்படுத்தியது.
தற்போது தோட்டத் தொழில், மூலப் பொருள் அமைச்சராக இருக்கும் ஸுரைடா, 2018 ஏப்ரல் 25ஆம் தேதி தாம் கட்சியை விட்டு விலகினால், பிகேஆருக்கு ஒரு கோடி ரிங்கிட்டை செலுத்தும் உடன்படிக்கையில் கையெழுத்திட்டுள்ளதால் அதனைச்செலுத்த வேண்டுமென கட்சி அவரின் மீது வழக்கைத் தாக்கல் செய்திருந்தது.
2020 பிப்ரவரி 24ஆம் தேதி அவர் 10 எம்பிக்களுடன் பெரிக்காத்தான் நேஷனல் கூட்டணியில் இணைந்தார். எனினும், கட்சியின் மூலம் கிடைத்த எம்பி பதவியை அவர் துறக்கவில்லை.
அவர் ஒரு கோடி ரிங்கிட்டோடு 5 விழுக்காடு வட்டியையும் சேர்த்து மொத்தமாக 12,049,459.20ஐ கட்சிக்குச் செலுத்த வேண்டுமென பிகேஆர் அவர் மீது வழக்கைத் தாக்கல் செய்திருந்தது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles