
எஸ்ஆர்சி வழக்கில் நஜிப் ரசாகிற்கு விதிக்கப்பட்ட தண்டனையை சீராய்வு செய்ய அவரின் சார்பில் அவரது வழக்கறிஞர் ஷாபி அப்துல்லா மனுவைத் தாக்கல் செய்துள்ளார்.
நஜிப்பின் வழக்கில் நீதி மறுக்கப்பட்டது. தம்மைத் தற்காத்துக் கொள்ள அவருக்கு வாய்ப்பைக் கூட்டரசு நீதிமன்றம் மறுத்துள்ளதாக மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
எஸ்ஆர் சியின் 42 மில்லியன் ரிங்கிட்டை தமது வங்கிக் கணக்கில் வரவு வைத்தது குற்றம் என்று கூறி, நஜிப்பிற்கு உயர்நீதிமன்றம் விதித்த 12 ஆண்டு சிறையும் 21 கோடி அபராதமும் விதிக்கப்பட்டது. அதனை கூட்டரசு நீதிமன்றம் உறுதி செய்துள்ளது. தற்போது நஜிப் காஜாங் சிறையில் தண்டனையை அனுபவித்து வருகிறார்.
