25.3 C
Kuala Lumpur
Sunday, April 26, 2026

Vetri

அரசுப் பணியாளரான ஸாஹிட் ரொக்கப் பணம் பெற்றது குற்றமே!

Umno president Datuk Seri Dr Ahmad Zahid Hamidi stated UMNO has decided not to join the Perikatan Nasional (PN), instead it will empower Muafakat Nasional (MN) together with PAS and BN component. He said during a press conference at the Kuala Lumpur High Court on Thursday, JULY 30,2020. – MUHAMAD SHAHRIL ROSLI/The Star.

அரசுப் பணியாளரான ஸாஹிட் ஹமிடி மற்றவர்களிடமிருந்து ரொக்கப் பணம் பெற்றதற்கான முகாந்திரம் இருப்பதாக ஷாஆலம் உயர்நீதிமன்றத்தில் சாட்சியம் அளிக்கப்பட்டது.
ஸாஹிட் உள்துறை அமைச்சராக இருந்தபோது, அல்ட்ரா கிரானா (யுகே எஸ்பி) நிறுவனத்திடமிருந்து ரொக்கப் பணம் பெற்றுள்ளதாக அரசுவழக்கறிஞர் ராஜா ரோஸிலா தோரான் குறிப்பிட்டார்.
அவர் உள்துறை அமைச்சராக நியமிக்கப்படுவதற்கு முன்னரே, அந்நிறுவனத்துடம் தொடர்பு வைத்திருந்தார்.
2013லிருந்து 2018ஆம் ஆண்டு வரை அந்நிறுவன அதிகாரிகள்அவரைச் சந்தித்து தங்களது நிறுவனத்திடம் வர்த்தக ஒப்பந்தாத்தை நீட்டிக்க பேசியதாகவும், அதற்காக அவர் கையூட்டு பெற்றதாக ராஜா ரோஸிலா தெரிவித்தார்.
சீனாவில் ஓரிடச் சேவை மையத்தின் ஒப்பந்தக் காலத்தை நீட்டிக்க அவர் அந்நிறுவனத்திடமிருந்து 1.356 கோடி சிங்கப்பூர் டாலரை (4 கோடியே 20 லட்சம் ரிங்கிட்) கையூட்டாகப் பெற்றதாக அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டது.
இந்த வழக்கானது ஷா ஆலம் உயர் நீதிமன்ற நீதிபதி யாஸிட் முஸ்தாப்பாவின் முன்னிலையில் தற்போது நடைபெறுகிறது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles