
மூவாரில் பிறந்த சாம் லிம் தற்போது ஆஸ்திரேலியாவில் ஒரு எம்பியாகத் தேர்ந்தெடுக்கப்
பட்டுள்ளார்.
நாடாளுமன்றத்தில் முதன் முறையாக உரையாற்றும்போது, மலாய் மொழியிலும் மாண்டரின் மொழியிலும் உரையாற்றி சாம் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தினார்.
தமது மகிழ்ச்சியை வெளிப்படுத்த வார்த்தையே இல்லையென்றும் தமது வெற்றிக்கு உறுதுணையாக இருந்த அனைத்து மலேசியர்களுக்கும் ஆஸ்திரேலியர்களுக்கும் தமது நன்றியைத் தெரிவித்துக் கொண்டார்.
மலேசியாவில் ஈராண்டுகள் போலீஸ் துறையில் பணியாற்றிய பின்னர், 2002இல் குடும்பத்தோடு ஆஸ்திரேலியாவுக்கு இடம் பெயர்ந்து, அங்கு போலீஸ் துறையில் பணியாற்றி, இப்போது தொழிலாளர் கட்சியின் எம்பியாக அவர் உயர்ந்துள்ளார்.
