
6 மாதத்திலிருந்து 5 வயதுக்கிடையிலான பல்வேறு நோய்களால் பாதிக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்குத் தடுப்பூசி செலுத்தப்படும் என்று சுகாதார அமைச்சர்
கைரி ஜமாலுடின் தெரிவித்தார்.
இந்த வயதுடையோருக்கு முதல் மருந்தளவு தடுப்பூசி செலுத்திய பின்னர், 6லிருந்து 9 மாதத்திற்குள் இரணடாவது
தடுப்பூசி செலுத்தப்படும்.
இதனிடையே, கர்ப்பிணிப் பெண்களுக்கும் தாய்ப்பால் கொடுத்துவரும் மாதர்களுக்கும் சிறப்பாகத் தயாரிக்கப்பட்ட ரொபோனுக்கிளியர் தடுப்பூசி செலுத்தப்படும் என்றும் கைரி தெரிவித்தார்
