31.3 C
Kuala Lumpur
Sunday, September 20, 2026

Vetri

சாதாரண கைதி போலவே நஜிப் நடத்தப்படுகிறார்

🔥 Views : 23
👁 Reading Now : 28

காஜாங் சிறைச்சாலையில் தண்டனை அனுபவித்து வரும் நஜிப் ரசாக், மற்ற கைதிகளைப் போலவே நடத்தப்படுகிறார் .
சிறைச்சாலையில் அவருக்கு எந்த விதமான சலுகையும் வழங்கப்படவில்லை என்றும் தெரிவிக்கப் படுகிறது.
மற்ற கைதிகளுக்கு வழங்கப்படும் அதே உணவுதான் ஐந்து முறை வழங்கப் படுகிறது. உடல்நிலை காரணமாக
சிறப்பு உணவும் வழங்கப்படுகிறது. உடற்பயிற்சி செய்வதற்கும் மனமகிழ் நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கும் அவருக்கு வாய்ப்பு வழங்கப்படுகிறது. அவர் குளிர்ந்த நீரில்தான் குளிக்கிறார். அவரின் அறையில் ஒரு மின்விசிறி மட்டுமே உள்ளது. அறையில் வெப்பம்
அதிகமாக இருப்பதால், கழுத்துப் பகுதியில் வெப்பக் கட்டிகள் உருவாகி இருக்கின்றன.
அவருக்கு ஒவ்வா நோய் இருப்பதால், தூக்கத்திலேயே
அவரின் சுவாசம் நின்றுவிடும் அபாயம் உள்ளது. அவர் சுவாசிப்பதற்காக இயந்திரம் ஒன்று தேவைப்படுவதாகவும்
சொல்லப்படுகிறது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles