
டிவிசன்களில் மறு தேர்தல் நடத்தப்படலாம் என வெளியான குற்றச்சாட்டை பி.கே.ஆர் தேர்தல் குழுவின் தலைவர் டாக்டர் Zaliha Mustaffa மறுத்தார். மறுதேர்தலை நடத்துவதற்காக சங்கங்களின் பதிவதிகாரியிடமிருந்து தங்களது தரப்பு எந்தவோரு கடிதத்தையும் இதுரை பெறவில்லை என அவர் கூறினார். சர்ச்சையை ஏற்படுத்த வேண்டும் என திட்டமிட்ட ஒரு கும்பல் இப்படிப்பட்ட குற்றச்சாட்டுக்களை பரப்பி வருவதாக டாக்டர் ஸலிஹா தெரிவித்தார். தேர்தல் குழுவின் தலைவராக இருக்கும் தாம் மறு தேர்தல் நடத்துவது குறித்து எதனையும் கேள்விப்படவில்லையென அவர் கூறினார்.
