
அண்மையில் மூடிய அரங்குகளில் முகக் கவசத்தை அணியத் தேவையில்லை என்று சுகாதார அமைச்சு அறிவித்தது.
அது சம்பந்தமாக விவாதம் நடைபெற்று வரும் நிலையில், நகர்ப்புறங்களில் உள்ள
பெருவாரியான மக்கள் முகக் கவசத்தை அணிந்தே உள்ளனர். கடந்த ஈராண்டு காலமாக முகக் கவசத்தை அணிந்து புதிய வாழ்க்கை முறைக்கு மாறி விட்டதால், இனி அதை விட்டுப் பிரிய முடியாது என்று பலரும் குறிப்பிடுகின்றனர். அது தங்களின், குடும்பத்தினர் பாதுகாப்புக்கு உத்தரவாதம் தருவதால், அதனை அணிவதில் சிரமம் ஏதுமில்லை என்றும் பலரும் குறிப்பிடுகின்றனர். கூட்டம் நிறைந்த இடங்கள் , மருத்துவமனைகள் , ஆலயங்கல் முதியோர் பராமரிப்பு இல்லங்கள் போன்றவற்றில் முகக் கவசம் அணிவது எல்லோருக்கும் பாதுகாப்பு அளிக்கும் என்று பலரும் கூறுகின்றனர்.
