
கிழக்குக்கரை மாநிலங்களில் திட்டமிடப்பட்டுள்ள நான்கு மேம்பாட்டுத் திட்டங்கள்
தொடரும் என்று பிரதமர் இஸ்மாயில் சப்ரி யாக்கோப் தெரிவித்தார். திரெங்கானு, Gemuroh (கெமுரோவிலிருந்து தும்பாட், Pengkalan Kubor (பெங்காலான்
கூபோர்) வரைக்குமான 147 கிலோ மீட்டர் தூரம் கொண்ட கிழக்குக்கரை விரைவுச்
சாலை-கட்டம் 2&3, 89.7 கோடி ரிங்கிட் செலவிலான ரந்தாவ் பாஞ்சாங்-கோலோக்கில்
வெள்ளத் தடுப்புத் திட்டம் மேற்கொள்ளப்படும். மேலும் குவாந்தான் -சிகாமாட் சாலையில் Runcing (ருஞ்சிங்கில்) இருந்து Keratong (கெராத்தோங் ) வரையிலான 51 கிலோ மீட்டர் தூரம் கொண்ட நெடுஞ்சாலை, ரந்தாவ்
பாஞ்சாங்கில் சுங்கை கோலோக்கில் பாலம், தாக் பாய் பெங்காலான் கூபோர் பாலக் கட்டுமானத் திட்டமும் மேற்கொள்ளப் படும் என்று அவர் தெரிவித்தார்.
