
தாம் அம்னோவின் துணைத் தலைவராக இருக்கையில் எந்தத் தொகுதியில் வேண்டுமானாலும் போட்டியிட முடியும். ஆனால், ரெம்பாவ் தொகுதியில் போட்டியிட வேண்டுமென்று அடம் பிடிக்கவில்லை என்று முகமட் ஹசான் தெரிவித்தார்.
தாம் யாரையும் அச்சுறுத்தி ஒரு தொகுதியில் இருந்து விலக வற்புறுத்தத் தேவையில்லை என்றும் அவர் தெரிவித்தார்.
இதனிடையே, ரெம்பாவ் தொகுதியின் எம்பியாக இருக்கும் கைரி ஜமாலுடின் அத்தொகுதியிலிருந்து வேறு தொகுதிக்கு மாறிச் செல்ல நெருக்குதல் தரப்பட்டுள்ளதால், 15ஆவது பொதுத்தேர்தலில் தாம் போட்டியிட முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.
