
மூடா கட்சி இளைஞர்களை ஈர்ப்பதில் வெற்றி பெறவில்லை. என்றாலும் அதனைப் பக்காத்தானில் சேர்த்துக் கொண்டு பொதுத் தேர்தலை எதிர்கொள்வதில் பாதகமில்லை என்று பினாங்கு துணை முதல்வர் டாக்டர் பி.ராமசாமி தெரிவித்தார்.
ஜொகூர் தேர்தலில் 18லிருந்து 21 வயது இளைஞர்களை அது கவர முடியாவிட்டாலும் புத்ரி வங்சா தொகுதியில் மட்டுமே வெற்றி பெற்றது. அது ஜசெக, அமானாவுடன் இணக்கப் போக்குடனும் பிகேஆருடன் எதிரும் புதிரமாக நடந்து கொண்டது.
அதன் தலைவர் சைட் சாடிக்கின் குளறுபடியான போக்கு பிகேஆர் தலைவர்களுக்கு எரிச்சலைத் தந்தாலும், அன்வார் இப்ராஹிம் அக்கட்சியை அரவணைத்துச் செல்ல வெண்டுமென டாக்டர் ராமசாமி கேட்டுக் கொண்டார்.
