33.5 C
Kuala Lumpur
Sunday, August 2, 2026

Vetri

இந்தியர்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதி சம்பந்தமாக தடயவியல் பரிசோதனை வேண்டும்

🔥 Views : 15
👁 Reading Now : 52

இந்தியர்களுக்கு உதவ 3
நிறுனங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதி, சம்பந்தப்பட்டோருக்குச் சென்றடைய வில்லை, அதில் பல மோசடிகள் நிகழ்ந்துள்ளதால் அவற்றை ஆராய தடயவியல் பரிசோதனை செய்ய வேண்டுமென எதிர்க்கட்சித் தலைவர் அன்வார் இப்ராஹிம் வலியுறுத்தியுள்ளார்.
80களில் மைக்கா ஹோல்டிங்ஸ் நிறுவனம் நிதி முறைகேட்டால் நலிந்தது. 2019இல் தொடங்கப்பட்ட மித்ரா நிதி முறைகேட்டினால் இந்தியர்களுக்கு எந்தப் பலனையும் தரவில்லை. அதே போன்று எம்ஐடிஎஃப் கல்விக் கழகம் நிதி முறைகேட்டால் இருக்குமிடம் தெரியாமல் போனது.
அரசு பல கோடி ரிங்கிட்டை அவற்றிற்கு ஒதுக்கியிருந்தும் இந்திய சமூகத்தில் வறுமை, வேலையில்லாத் திண்டாட்டம், சமூகப் பொருளாதரப் பிரச்சினைகள் தலை விரித்தாடுவதாக அவர் குறிப்பிட்டார். இந்திய சமூகம் எதிர்பார்த்த பலனை அடையவில்லை.
எனவே, இந்த நிறுவனங்களின் மீது தடயவியல் பரிசோதனையை மேற்கொண்டு பணத்தைக் கொள்ளையிட்டவர்களைச் சட்டத்தின் முன் நிறுத்த வேண்டுமென அன்வார் வலியுறுத்தினார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles