
நாட்டின் அரசமைப்பு விதிகளைப் புரிந்து கொண்டு கெடா மந்திரி பெசார் சனுசி மாட் நோர் பேச வேண்டுமென்று பினாங்கு துணை முதல்வர் டாக்டர் பி. ராமசாமி அறிவுறுத்தியுள்ளார்.
வட மாநிலங்களின் வட்டார நீர் பராமரிப்பு ஆணையத்தை அமைப்பதால் கெடா மாநில இறையாண்மை பாதிக்கப்படும் என்று கூறி, அவர் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருப்பதாக ராமசாமி குறிப்பிட்டார்.
இறையாண்மை என்பது ஒட்டு மொத்தமாக நாட்டுக்கே உரியதாகும். அது ஒவ்வொரு மாநிலத்திற்கும் இல்லை என்பதை அவர் உணர வேண்டும்.
மாநிலங்களுக்கிடையிலான நீர் பிரச்சினைகளுக்கு கூட்டரசு அரசுதான் தீர்வு காண வேண்டுமென்றும் அதற்காகத்தான் நீர்வள அமைச்சும் அதற்கென அமைச்சரும் இருப்பதாக டாக்டர் ராமசாமி குறிப்பிட்டார்.
