
Boustead Heavy Industries (போஸ்டெட் ஹெவி இன்டஸ்ட்ரீஸ்நிறுவனத்திற்காக) போர்க் கப்பல் சம்பந்தமான தடயவியல் அறிக்கையைத் தயாரித்த Allaiance IFA (அல்லாயன்ஸ் ஐஎஃஏ) தனியார் நிறுவனத்தின் இயக்குநர் பிரபாட் குமார் அதனை மீட்டுக் கொள்ள வேண்டுமென கெட்டுக் கொள்ளப்பட்டது. அதில் தம்மைப் பற்றி அவதூறான தகவல்கள் இருப்பதால் அதனை மீட்டுக் கொண்டு, தம்மிடம் மன்னிப்பு கேட்க வேண்டுமென பிரதமர் துறை அமைச்சர் Abdul Latiff Amad (அப்துல் லத்திஃப் அமாட் ) எச்சரித்துள்ளார். தமது இரண்டாவது மனைவி Zainab mohd Saleh (ஸைனாப் முகமட் சாலே ) நிறுவனத்திற்கு தாம் துணைக் குத்தகைகளைப் பெற்றுத் தந்து, அரசின் பணத்தைக் கொள்ளையடித்ததாகக் குறிப்பிடப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். எனவே, அந்த அறிக்கையை மீட்டுக் கொண்டு மன்னிப்பு கேட்க வேண்டுமென்றும் தவறினால், சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் லத்திஃப்பின் வழக்கறிஞர் கடிதத்தில்
குறிப்பிட்டுள்ளார்.
