
மலாக்கா ஆட்சிக் குழு உறுப்பினர் அப்துல் ராவுஃ யூசோ, மலாக்காவையும்
இந்தோனேசியா Dumai (டுமாயை) யும் இணைக்கும் 120 கிலோ மீட்டர் பாலம் கட்டப்
படும் என்று அறிவித்தது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தார். அதற்கான தேவை என்ன, முழு அளவிலான ஆய்வு செய்யப்பட்டதா, எந்த தனியார் நிறுவனம் அதனை நிர்மாணிக்கும், அதன் செலவு போன்றவை என்னவென்பதை அறிவிக்க வேண்டுமென கோத்தா மலாக்கா எம்பி கூ போய் தியோங் கேள்வி எழுப்பினார். மார்ச் மாதம் ராவுஃப் மலாக்காவில் இருந்து டுமாய்க்கு 47 கிலோ மீட்டர் தூரம்
கொண்ட கடலடி சுரங்கப் பாதை நிர்மாணிக்கப்படும் என்று கூறிய பின்னர், இப்போது பாலம் கட்டப்படும் என்பது மோசடி போல இருப்பதாக கூ தெரிவித்தார்.
