
சவாவைச் சேர்ந்த Puathin PIlandong (புவாத்தின் பிளாண்டோங்) தம்முடைய 90 ஆவது வயதில் அம்மாநிலத்தில் உள்ள கினபாலு மலையில் ஏறி சாதனை படைத்துள்ளார். அம்மாநில ரயிவே துறையின் முன்னாள் ஊழியரான அவர், 2015ஆம் ஆண்டில் தமது 83ஆவது வயதில் அச்சிகரத்தின் மீது ஏறியுள்ளார். இப்போது மீண்டும் சாதனையைப் படைத்துள்ளார். 5 பிள்ளைகளுக்குத் தந்தையான புவாத்தின் இம்மாதம் 5ஆம் தேதி பிற்பகல் 2.20 மணிக்கு அச்சிகரத்தை சென்றடைந்தார்.
மறுநாள் மாலை 6.15மணிக்கு அவர் அடிவாரத்தை வந்தடைந்தார். தென்கிழக்காசியாவின் மிக உயரமான மலையான மவுண்ட் கினபாலு சிகரத்தைத் தொட்ட மிக வயதான மலேசியர் எனும் பெருமையை இதன் மூலம் அவர் பெற்றார்.
