
பேராக், பீடோருக்கு அருகில் காட்டில் விபத்துக்குள்ளான ஹெலிகாப்டரின் விமானி, மீட்கும் நடவடிக்கையின்போது மரணமுற்றதாகப் பேராக் போலீஸ் தலைவர் Mohd Yusri Hasan (முகமட் யுஸ்ரி ஹசான்) தெரிவித்தார்.
ஹாங்காங்கைச் சேர்ந்த 58 வயதான கேப்டன் Richard Chan (ரிச்சர்ட் சான்) சுயநினைவின்றி மரணமடைந்துள்ளதாகத் தெரிவித்தார்.
அவரின் உடல் காலை 9.20 மணியளவில் கண்டெடுக்கப்பட்டு, ஈப்போ பெர்மைசுரி பைனுன் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டதாக அவர் தெரிவித்தார்.
