
சிலாங்கூர் மாநிலத்தின் சார்பில் Najib Razak (ரஜிப் ரசாக்)கிற்கும் அவரது மனைவி Rosmah Mansor (ரோஸ்மா மன்சோரு)க்கும் வழங்கப்பட்ட விருதுகளை சிலாங்கூர் சுல்தான், சுல்தான் ஷராஃபுடின் இட்ரிஸ் ஷா மீட்டுக் கொண்டார்.
நேற்று மாநிலச் செயலாளர் ஹாரிஸ் காசிம் வெளியிட்ட ஓர் அறிக்கையில், நஜிப்பிற்கு 2004லும் 1992ஆம் ஆண்டிலும் வழங்கப்பட்ட டத்தோஸ்ரீ. டத்தோ விருதுகளையும் 2005ஆம் ஆண்டில் ரோஸ்மா மன்சோருக்கு வழங்கப்பட்ட ‘டத்தோ படுக்காஸ்ரீ’ எனும் விருதினையும் சுல்தான் மீட்டுக் கொண்டதாக அறிவித்தார்.
இந்நிலையில், மற்ற சுல்தான்கள் வழங்கியிருக்கும் விருதுகளை நஜிப் தம்பதியர் பயன்படுத்துவதில் தடையேதும் இல்லை.
