
எதிர்வரும் 19 ஆம் தேதி திங்கட்கிழமை நடைபெறும் எலிசபெத் அரசியாரின் இறுதிச் சடங்கில் மலேசியாவை பிரதிநிதித்து மாட்சிமை தங்கிய பேரரசர் அல் சுல்தான் அப்துல்லா , பேரரசியார் துங்கு ஹஜா அஸிஸா அமினா ஆகியோர் கலந்துகொள்வார்கள். வெளியுறவு அமைச்சர் சைபுடின் அப்துல்லா இன்று இதனை தெரிவித்தார். எலிசபெத் அரசியார் இம்மாதம் 8 ஆம் தேதியன்று தமது 96ஆவது வயதில் Scotland பால்மோரல் அரண்மனையில் காலமானார். அவரது இறுதிச்சடங்கு வெஸ்ட்மின்ஸ்டர் அபேயில் நடைபெறும். தமது கணவர் பிலிப் இளவரசர் அடக்கம் செய்யப்பட்ட இடத்திற்கு அருகில் எலிசபெத் அரசியாரின் நல்லுடல் அடக்கம் செய்யப்படும். பிரிட்டனில் 70 ஆண்ட காலம் எலிசபெத் அரசியார் அரியணையில் இருந்துள்ளார்.
