
நஜீப் ரசாக் சம்பந்தப்பட்ட 1 எம்.டி.பி வழக்கு விசாரணை இம்மாதம் 26ஆம் தேதி மீண்டும் தொடரும். தற்போது நஜீப் கோலாலம்பூர் பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதால் தினசரி அவரிடம் மருத்துவர்கள் பரிசோதனை செய்ய வேண்டியிருப்பதாக நஜீப்பின் வழக்கறிஞரான ஷாபி அப்துல்லா தெரிவித்தார். கோலாலம்பூர் பொது மருத்துவமனை விநியோகித்துள்ள மருத்துவ சான்றிதழை சிறைத்துறை நஜீப்பின் வழக்கறிஞர் குழுவிடம் வழங்கியிருப்பதாக அவர் கூறினார். நஜீப் உடல் நலமின்றி இருப்பதால் செம்டம்பர் 14 மற்றும் 15ஆம் தேதிகளில்
நீதிமன்ற விசாரணைக்கு வரமுடியாது என அந்த மருத்துவ சான்றிதழில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மூன்று மணி நேரம் காத்திருந்த பின் இன்று கோலாலம்பூர் பொது மருத்துவமனையில் தாம் நஜீப்பை சந்தித்ததாக முகமட் ஷாபி தெரிவித்தார்.
