
அமெரிக்க டாலருக்கு எதிராக மலேசிய ரிங்கிட்டின் மதிப்பு 27 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு சரிந்திருப்பதை சாதாரணமாக நிதியமைச்சர் எடுத்துக் கொள்ளக் கூடாதென ஜசெகவின் தலைமைச் செயலாளர் Anthony Loke Siew Fook (அந்தோணி லோக் சியூ ஃபூக்) கேட்டுக் கொண்டார்.
ரிங்கிட்டின் மதிப்புச் சரிவினால், இறக்குமதி செய்யப்படும் பொருள்களின் விலை அதிகரிக்கும். அது மக்களுக்கு சிரமத்தையும் பண வீக்கத்தையும் உருவாக்கும். உணவுப் பொருள்களை இறக்குமதி செய்ய ஆண்டுதோறும் அரசு 5,000 கோடி ரிங்கிட்டை செலவழித்து வருவதை மறக்கக்கூடாது என்றும் அவர் குறிப்பிட்டர்.
பண வீக்கம் நாட்டைப் பாதிக்கும் வரை காத்திராமல், அதனைத் தடுக்க அரசு வழி வகை காண வேண்டுமென அந்தோணி லோக் கேட்டுக் கொண்டார்
