
பேராக், கிந்தா மாவட்டத்தில் அரசு நிலம் 2
ஹெக்டரை பெற்றுத் தருவதற்கு 4 லட்சம் ரிங்கிட் லஞ்சம் கேட்ட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்களில் ஈப்போ நில, சுரங்க அலுவலக நிர்வாக உதவியாளர், நிறுவனம் ஒன்றின் 41, 50 வயதுடைய இரு இயக்குநர்கள் ஆகியோர் ஈப்போ ஊழல் தடுப்பு அலுவகலகத்திற்கு வாக்குமூலம் அளிக்க வந்தபோது கைது செய்யப்பட்டனர்.
விசாரணைக்காக அந்த மூவரும் அடுத்த செவ்வாய்க்கிழமை வரை தடுத்து வைக்கப்படுவர்
