
கடந்த ஜுலை 4ஆம் தேதி கெடா, பாலிங்கில்
நேர்ந்த வெள்ளமானது 26 மில்லியன் ரிங்கிட்
இழப்பை ஏற்படுத்தி இருப்பதாக கெடா மந்திரி பெசார் Sanusi Mad Nor (சனுசி மாட் நோர்) தெரிவித்தார்.
வீடுகளின் சேதம், கட்டடங்களில் பாதிப்பு, கட்டமைப்பு வசதிகளில் பழுது, வாகனங்களுக்குச் சேதம் போன்றவை அந்த இழப்புகளில் அடங்கும்.
முதலில் ஏற்பட்ட வெள்ளம் பாதித்த 41 பகுதிகளில் 900 பேர் ஈடுபடுத்தப்பட்டு, புள்ளி விவரம் சேகரிக்கப்பட்டதாக அவர் தெரிவித்தார்.
அதில் பாதிப்புக்குள்ளான 17 வீடுகள் சீரமைக்கப் பட்டுள்ளதாகவும் பாதிப்புக்குள்ளான நிலப் பகுதிகள் சீரமைத்து சமப்படுத்தப்பட்டிருப்பதாகவும் முற்றாக சேதம் அடந்த பேய்லி பாலம் புதிதாகக் கட்டி முடிக்கப்பட்டு பயன்பாட்டுக்குத் திறந்து விடப்பட்டிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
