
நாட்டின் நீதிபதிகள் எந்நேரத்திலும் அரசமைப்பு விதி, சட்டமுறைப்படி ஆட்சி போன்றவற்றைத் தற்காக்க வேண்டுமென்று தலைமை நீதிபதி துன் தெங்கு மைமுன் துவான் மாட் அறிவுறுத்தியுள்ளார்.
மறைந்த முன்னாள் தலைமை நீதிபதி Saleh Abas (சாலே அபாஸின்) நினைவேந்தல் நிகழ்ச்சியில் உரையாற்றிய தெங்கு மைமுன், நாட்டின் நீதித் துறையில் அவர் மிகவும் முக்கியமானவர் என்றும் நீதித் துறையின் சுதந்திரத்திற்காகப் பாடுபட்டவர் என்றும் குறிப்பிட்டார்.
அவர் நீதித்துறையில் பல்வேறு மாற்றங்களைக்
கொண்டுவந்து, அவை இன்றளவும் பயன்பாட்டில்
இருப்பதாகவும் தெங்கு மைமுன் குறிப்பிட்டார்.
