
34 வயது நபர் தமது வளர்ப்பு மகளை ஈராண்டு காலம் பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் அவருக்கு 1.050 ஆண்டு சிறைத் தண்டனை விதித்த செஷன்ஸ் நீதிமன்ற நீதிபதி நியாயமாக நடந்து கொள்ளவில்லை என்று உயர்நீதிமன்ற நீதிபதி Azmi Abdullah) அஸ்மி அப்துல்லா தெரிவித்தார்.
மனிதர்களின் வாழ்நாள் காலத்தை விட தண்டனைக் காலம் அதிகமாக இருப்பதால், சில வழக்குளின் தீர்ப்புகளை மேற்கொள் காட்டிய நீதிபதி, 1, 050 ஆண்டு கால சிறைத் தண்டனையை 42 ஆண்டுகளாகக் குறைத்ததோடு 42 பிரம்படியை நிலை நிறுத்தினார்.
