
மலேசிய குடும்ப நிதியுதவியின் மூன்றாம் கட்டமானது இம்மாதம் 20ஆம் தேதியிலிருந்து 27ஆம் தேதி வரை விநியோகிக்கப்படும் என்று பிரதமர் இஸ்மாயில் சப்ரி யாக்கோப் தெரிவித்தார்.
இந்த 3ஆவது கட்டத்தில் 8.7 மில்லியன் பேருக்கு 220 கோடி ரிங்கிட் செலவாகும் என்றும் இத்திட்டத்தில் பயனாளிகளுக்கு ரிம. 900மும் முதன் முதலாக மனுச் செய்து அங்கீகரிக்கப்பட்டோருக்கு ரிம. 2,350ம் வழங்கப்படும்.
4ஆவது கட்ட நிதியுதவி டிசம்பரில் விநியோகிக்கப்படும் என்றும் அதற்கு 210 கோடி ரிங்கிட் செலவாகும் என கணிக்கப்பட்டுள்ளது. இவ்வாண்டு இது வரை இத்திட்டத்திற்கு 590 கோடி ரிங்கிட் செலவிடப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
