
மலேசிய குடும்பம் எனும் அடிப்படையில் நாட்டின் மொத்த வருமானத்தில் 40 விழுக்காடு பங்கினை வழங்க வேண்டுமென்று தாம் வலியுறுத்தி வருவதாக சபா முதலமைச்சர் தெரிவித்தார்.
மாநிலங்களில் அந்நிய முதலீட்டைப் பெறுவதில் சபா மூன்றாம் இடத்தில் இருப்பதாகவும் சிறப்பு மானியம் என்பது அரசமைப்பு விதி 112டியில் காணப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
மேலும், சபா மாஜு ஜெயா எனும் திட்டத்தின் வழி வெளி நாட்டு மூலதன தங்கு தடையின்று மாநிலத்திற்கு வருவதாகக் குறிபிட்ட முதலமைச்சர் ஹஜிஜி, சபா மற்ற மாநிலங்களைப் போன்றே மேம்பாட்டு வளர்ச்சியைப் பெற வேண்டுமென்பதே தமது நோக்கமென்றும் அவர் குறிப்பிட்டார்.
