
பக்காத்தான் கூட்டணித் தலைவர்கள் ஊழல் மிகுந்த தலைவர்கள் என்று கூறியிருக்கும் பாஸ் கட்சித் தலைவர் அப்துல் ஹாடி அவாங் அதனை நிரூபிக்க முடியுமா என அமானாவின் துணைத் தலைவர் Salahudin Ayub (சலாஹுடின் அயூப்) சவால் விடுத்தார்.
முஸ்லிம்கள் ஆதாரமில்லாமல் எதனையும் குற்றம் சொல்லக் கூடாதென இஸ்லாம் போதிக்கும்போது, அவர் தமது கூற்றினை நிரூபிக்க வேண்டுமென சலாஹுடின் வலியுறுத்தினார்.
பக்காத்தானை குறை கூறும் ஹாடி அவாங், அம்னோ தலைவர்கள் பலர் ஊழல் வழக்குகளில் சிக்கியிருப்பதை மறந்துவிட்டு அக்கட்சியுடன் தேர்தல் உடன்பாடு வைத்துக் கொள்ள ஹாடி அவாங் தவமாய் தவமிருப்பது எதனால் என சாலாஹுடின் கேள்வி எழுப்பினார். ஆக, அம்னோ ஊழல் செய்யவில்லையா என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.
