28.5 C
Kuala Lumpur
Saturday, April 25, 2026

Vetri

ஊழல் சந்தேகம் இருக்கும் அரசின் குத்தகைத் திட்டங்களை பிஏசி விசாரிக்கட்டும்

கரையோர பாதுகாப்பைக் கண்காணிக்கும் கப்பல் கட்டுமானம் உட்பட அரசின் சந்தேகத்துக்குரிய குத்தகைத் திட்டங்களை நாடாளுமன்றப் பொது கணக்குக் குழு(பிஏசி) ஆராய்ந்து அறிக்கை தர விட்டுவிட வேண்டுமென்று பிரதமர் இஸ்மாயில் சப்ரி யாக்கோப் தெரிவித்தார்.
பொது கணக்குக் குழுவில் ஆளும், எதிர்க்கட்சி எம்பிக்கள் இடம் பெற்றிருப்பதால் அதன் அறிக்கை நம்பகமானதாகவும் உண்மையானதாகவும் இருக்கும் என எதிர்பார்க்கலாம். அக்குழு எந்த அமைப்பையும் தனி நபரையும் அழைத்து விசாரணை செய்ய அதிகாரம் கொண்டது.
இந்நிலையில் கரையோர பாதுக்காப்பைக் கண்காணிக்க 73.89 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான 3 கப்பல்களுக்கான குத்தகை 2020இல் வழங்கப்பட்டது. இன்னும் அவை கட்டி முடிக்கப்படவில்லை என்றும் அதில் ஊழல் நடந்திருக்கும் வாய்ப்பு அதிகமாக இருப்பதால் அதனை பிஏசி விசாரிக்க வேண்டுமென்று பக்காத்தான் எம்பி Mohd Mujahid Yusof Rawa (முஜாஹிட் யூசோப் ராவா) கேட்டுக் கொண்டுள்ளார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles