28.5 C
Kuala Lumpur
Saturday, April 25, 2026

Vetri

அம்னோ-பாஸ் உறவின் மீது உச்சமன்றமே தீர்மானிக்கும்

அம்னோ-பாஸ் கட்சிகளின் ஒத்துழைப்பை உச்சமன்றமே தீர்மானிக்கும் என்று பிரதமர் இஸ்மாயில் சப்ரி யாக்கோப் தெரிவித்தார்.
பாஸ் கட்சி அம்னோவுடன் ஒத்துழைக்க விரும்பும் காரணத்தைக் கட்சித் தலைவர்கள் செவிமடுக்கத் தயாராக இருந்தாலும், அதனை முடிவெடுக்க வேண்டியது கட்சியின் உச்சமன்றமே ஆகும்.
இதற்கு முன்னர், அம்னோவுக்கும் பாஸ் கட்சிக்கும் இடையிலான உறவில் விரிசல் ஏற்பட்டது. பாஸ் கட்சி முஹிடின் யாசின் தலைமையிலான பெரிக்காத்தானோடு நெருக்கமாக இருப்பதை அம்னோ தலைவர்கள் கடுமையாக எதிர்த்து வருகின்றனர்.
பொதுத்தேர்தலில் சாதுரியமாக காய் நகர்த்தி வேண்டிய மட்டும் ஆதாயம் தேடி, ஆட்சியில் இடம் பிடிக்கவே பாஸ் கட்சியின் தலைவர் அப்துல் ஹாடி அவாங் முனைவதாக அம்னோ உறுப்பினர்களில் பலர் விமர்சிக்கத் தொடங்கியுள்ளனர்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles