34 C
Kuala Lumpur
Saturday, April 25, 2026

Vetri

நஜிப் ரசாக்கிற்கு வழங்கியிருக்கும் விருதினை பினாங்கு அரசு மீட்டுக் கொண்டது

சிலாங்கூரை அடுத்து, பினாங்கு மாநில அரசும் முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக்கிற்கு வழங்கியிருந்த விருதினை மீட்டுக் கொண்டது.
கூட்டரசு நீதிமன்றம் எஸ்ஆர்சி வழக்கில் நஜிப்பின் 12 ஆண்டு சிறை, 21 கோடி ரிங்கிட் அபராதத்தை உறுதிப்படுத்திய பின்னர், அவருக்கு வழங்கப்பட்ட விருதினை மீட்டுக் கொள்ள பினாங்கு கவர்னர் Ahmad Fuzi Abdul Razak (அமாட் ஃபுஸி அப்துல் ரசாக்) உத்தரவிட்டுள்ளதாக மாநில தற்காலிகச் செயலாளர் ஸக்குவான் ஸக்காரியா தெரிவித்தார்.
கடந்த செப்டம்பர் 12ஆம் தேதி, சிலாங்கூர் சுல்தான், சுல்தான் ஷராஃபுடின் இட்ரிஸ் ஷா நஜிப்பிற்கு வழங்கியிருந்த டத்தோ, டத்தோஸ்ரீ விருதுகளையும் Rosmah Mansor (ரோஸ்மா மன்சோருக்கு) வழங்கியிருந்த டத்தின் படுக்காஸ்ரீ விருதினையும் மீட்டுக் கொண்டது குறிப்பிடத்தக்கது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles